ரத்தப்புற்றுநோய் பற்றிய சில புரிதல்கள்!
ரத்தப்புற்றுநோயில் இரண்டு வகைகள் உள்ளன. லுகேமியா மற்றும் லிம்போமா.
லுகேமியா என்பது எலும்பு மஜ்ஜையில் உருவாகும் வெள்ளை ரத்த அணுக்களின் புற்றுநோயாகும். லிம்போமா என்பது நிணநீர்க் மண்டலத்தை பாதிக்கும் புற்றுநோயாகும்.
கேன்சர் செல்கள் அதிகம் இருந்தால், சிவப்பு, வெள்ளை, தட்டணுக்கள் குறையத்துவங்கும். நல்ல அணுக்கள் குறையும் போது, நோய் எதிர்ப்பு சக்திகளும் குறைந்துவிடும்.
அதிக சோர்வு, காய்ச்சல் , காரணங்கள் இன்றி ரத்தம் வெளியேறுதல், வலி இல்லாத நெறிகட்டிகள் வீங்கிக்கொண்டே செல்வது, நீண்ட நாட்கள் தொடர்வது ஆகியன அறிகுறிகள்.
ரத்தபுற்றுநோய் வந்தால் சிகிச்சை இல்லை என்று, எண்ணுவதுமுற்றிலும் தவறான புரிதல்.
லுகேமியா புற்றுநோயால் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டால், 90 பேர் முழுமையாக குணமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரத்த புற்றுநோய் சிகிச்சையை ஆரம்பத்தில் துவக்கிவிட்டால், பிற புற்றுநோய்களை காட்டிலும் எளிதாக குணப்படுத்த இயலும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.