தூக்கி எறியும் ஆரஞ்சு தோலிலும் சத்துகள் இருக்கு !
வீண் என்று குப்பையில் போடக் கூடிய ஆரஞ்சு தோலில் அதன் பழத்தை போன்றே ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதில் அதிக அளவுள்ள ஃபோலேட், ரிபோஃப்ளேவின், தியாமின், பி6, கால்சியம் போன்றவை இது நீரிழிவு, உடல் பருமன் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட நாள்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதிலுள்ள ஃபிளாவனாய்டு ஹெஸ்பெரிடின் பண்புகள் ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்த அளவைப் பராமரிக்கிறது. இதனால், பக்கவாதம், இதயம் தொடர்பான பாதிப்புகளை தவிர்க்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரஞ்சு தோல்களில் உள்ள வலுவான ஃபிளாவனாய்டு கலவைகள் உயிரணுக்களில் புற்றுநோயை உண்டாக்கும் புரதத்தை கட்டுப்படுத்துகிறது.
இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. அஜீரணம், மலச்சிக்கல், வாய்வு, இரைப்பை குடல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க சிட்ரஸ் பழங்களின் தோல் இயற்கை தீர்வாக முன்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆரஞ்சு தோலிலுள்ள வைட்டமின் சி நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற உதவுகிறது. நுரையீரல் தொற்றுகளைத் தடுப்பதுடன், உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துகிறது.
சருமப் பராமரிப்பிலும் ஆரஞ்சு தோல் முக்கியப்பங்கு வகிக்கிறது. கரும்புள்ளிகள், இறந்த சரும செல்கள், முகப்பருக்களை குறைக்க உதவுவதால், பெரும்பாலான கிரீம்களில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆரஞ்சு தோல் பொடியை பாலில் கலந்து முகத்தில் தடவி, 10 - 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தப்படுத்தவும். இந்த ஃபேஸ் பேக், சருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் வைக்க உதவுகிறது.