வாய்ப் புற்றுநோய் காரணமும் சிகிச்சையும்!

நம் நாட்டில், ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் பொதுவாக காணப்படுவது, வாய்ப்புற்று நோய் எனப்படும், 'ஓரல் கேன்சர்'. வாய்ப் புற்றுநோய் இளம் வயதினர், பெண்களையும் பாதிக்கலாம்.

நீண்ட நாளாக ஆறாத புண், வெண்மை, சிவப்பு நிறப்புள்ளி, தழும்பு வாயில் தோன்றி வளர்ந்து, கட்டுப்படுத்த முடியாத புற்று நோயாக மாறலாம்.

வாய்ப்புற்று நோய், வாயில் உள்ள மேல் தாடை, கீழ் தாடை, கன்னத்தின் உள்பகுதி, உதடு, நாக்கின் அடிப்பகுதியில் ஏற்படும்.

வாய்ப்புற்று நோய், சிறிய வலி இல்லாத புண்ணாகவோ, கட்டியாகவோ தோன்றும். இந்த சிறிய புண் தழும்பாக மாறி, செல்களில் மாற்றத்தை உண்டாக்கி, கேன்சரை உண்டாக்கும்.

வாயில் ஆறாத புண், வெள்ளை, சிவப்பு நிறத்தழும்பு, உள் கன்னத்தில் சிறிய கட்டிகள், உணவு சாப்பிடும் போது எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

மேலும் உதடு, நாக்கு மரத்துப்போதல் வாயைத் திறக்க சிரமம், குரலில் மாற்றம், சில நேரங்களில் வாயில் ரத்தம் கசியலாம்.

நம் செல்கள் கட்டுப்பாடின்றி வளர்வதால் வரக்கூடிய கேன்சர் கட்டி. இது சிறியதாக உருவாகி, உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவக் கூடியது. ஆரம்பத்தில் இதை அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம்.