காதில் பாட்டு சத்தம்... என்ன காரணம்?
பாட்டு போடாமலேயே காதில் பாட்டு சத்தம் கேட்டால், இந்நிலை செவிவழி மாயத்தோற்றம் என்றழைக்கப்படும் மனசிதைவு நோயாக இருக்கலாம்.
யாரும் பேசாமலே, தன் காதில் ஏதோ கேட்டுக் கொண்டே இருப்பதாக தோன்றும்.
இதை கண்டுகொள்ளாமல் விட்டால், தற்கொலை, வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற, அபாய நிலைக்கு கொண்டு செல்லும்.
இதற்கு மனநல சிகிச்சை அவசியம். சில மருந்துகள், தெரபி மூலம் பழைய நிலைக்கு மாற்ற முடியும்.
இதன் ஆரம்பப்புள்ளி, மன அழுத்தத்தில் இருந்துதான் துவங்குகிறது. இது பெரும்பாலும், வயதானவர்களுக்கே ஏற்படுகிறது.
யாரும், எதுவும் கேட்காமலே, சிலர் தாமாக முன்வந்து சொந்தக்கதையை சொல்வர். யாரிடமாவது பேசி, புலம்பி கொண்டே இருப்பதும் ஒருவித மன நோய் தான்.
சிலருக்கு வயதானால், மூளையின் செயல்திறன் குறைந்து மறதிநோய் ஏற்படும். இவர்களுக்கு கடந்தகால நினைவுகள் அப்படியே இருக்கும்.
தனிமை, புறக்கணிப்பு, பிறரை சார்ந்திருக்கும் நிலை, குழந்தைகளிடம் முக்கியத்துவம் குறைதல் போன்ற பல்வேறு காரணிகள் தான், மனநோய்க்கு ஆரம்ப புள்ளி.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல், மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு உட்படுத்துவது அவசியம். உடல்நலம் போலவே மனநலத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.