சமையல் எண்ணெயை குறைப்பது அவசியமா? எவ்வளவு தேவைப்படும்?

சமையல் எண்ணெய் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளவது ஆரோக்கியமானது. குறிப்பாக உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.

அந்த வகையில், 20 - 25 மில்லி சமையல் எண்ணெய் தான் ஒருவருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும்; அதாவது, நான்கு அல்லது ஐந்து டீஸ்பூன்.

சமையல் எண்ணெயில் பாமாயில், நெய், வனஸ்பதி, வெண்ணெய் போன்றவை சூடுபடுவதால் மூலக்கூறு அமைப்பில் மாற்றம் அடையும் தன்மை உள்ளது.

இவற்றை அதிகபட்சம் 5 மில்லி மட்டுமே உபயோகிக்கலாம். காரணம், 'எல்டிஎல்' எனப்படும் கெட்ட கொழுப்பை இது அதிகரிக்கும்.

பொதுவாகவே நம் உடலுக்கு உணவு பொருட்களிலிருந்து இருந்து கொழுப்பு சேமிக்கப்படுவதை விட, அதிகப்படியான எண்ணெய் பயன்பாட்டால் கொழுப்பை சேமிப்பது சுலபம்.

அதனாலேயே எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் 25 மில்லிக்கு மேல் சாப்பிடக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.