பொங்கல் ஸ்பெஷல்… அக்கார அடிசில் ரெசிபி!

சர்க்கரை பொங்கல் என்பது நீரில் வேகவைத்து வெல்லப்பாகு சேர்த்து செய்யப்படும். ஆனால் அக்கார அடிசில் என்பது அரிசியை பாலில் வேகவைத்து செய்யப்படுவது. அதன் ரெசிபி இதோ.

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - அரை கப், பாசிப்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி, பால் - ஆறு கப், நெய் - இரண்டு தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 15, உலர் திராட்சை - 10, பேரீச்சை - இரண்டு; தேவைப்பட்டால் சேர்க்கலாம். கிராம்பு - இரண்டு, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்துாள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு களைந்து, குக்கரில் போடவும். அதனுடன் பால் சேர்த்து, இரண்டு விசில்கள் வரும் வரை வேகவிடவும்.

அல்லது அடி கனமான பாத்திரத்தில், அடுப்புத் தணலை நிதானமாக வைத்து வேகவிடவும். கலவை நன்றாக குழைய வெந்ததும், வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி ஊற்றவும்.

அதில், நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்துாள், பொடித்த பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பு சேர்க்கவும். பேரீச்சையை நன்றாக மசித்து சேர்த்து, கிளறிவிட்டு பரிமாறவும்.