ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ராகி சமோசா
தேவையான பொருட்கள் :ராகி மாவு, வேகவைத்த உருளைக்கிழங்கு - தலா 1 கப் , கம்பு மாவு - 2 ஸ்பூன், சீரகம், சோம்பு - 1 ஸ்பூன், கொத்துமல்லி - ஒரு கைப்பிடி, மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
பச்சைபட்டாணி - அரை கப், பச்சைமிளகாய் - 3, வெங்காயம் - 1, முந்திரிப்பருப்பு - 10, உலர்ந்த திராட்சை - 2 ஸ்பூன்,புளிச்சாறு - 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சைகளை போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, சிறிதாக நறுக்கிய பச்சை காய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன்பின் மஞ்சள், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவையில் புளிச்சாறு, முந்திரிப்பருப்பு, திராட்சையை போட்டு கிளறவும்.
இதை சிறு சிறு உருண்டைகளாக்கவும். இவற்றை சப்பாத்திகளாக தட்டவும். இதை சமோசா வடிவமாக்கி, அதற்குள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து நிரப்பி மூடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் சமோசாக்களை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால், சுவையான ராகி சமோசா தயார்.
தக்காளி சாஸ் அல்லது கிரீன் சட்னி தொட்டு சாப்பிட்டால், சுவை அதிகமாக இருக்கும். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர்.