முட்டைகோசில் சுவையான பக்கோடா!
மொறு மொறுப்பான முட்டைகோஸ் பக்கோடாவை எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : நறுக்கிய முட்டைகோஸ்- 1கப், வெங்காயம்-1/2 கப், பச்சை மிளகாய் -3, கொத்துமல்லி - சிறிதளவு .
கடலை மாவு-1/2 கப், அரிசி மாவு-3 டீஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.
முதலில் முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின், ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கடலை மாவு, அரிசி மாவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
பக்கோடா போடுவதற்கு உகந்த வகையில் மாவின் பதம் இருக்க வேண்டும்.
பின், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் மாவுக்கலவையை சிறு சிறு பகுதிகளாக போட வேண்டும்.
எண்ணெயில் நன்கு பொறிந்ததும், அதை வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும் முட்டைகோஸ் பக்கோடா தயார்.