ஓணம் ஸ்பெஷல் எரிசேரி! ரெசிபி இதோ!
தேவையானவை: தோல், விதை நீக்கி நறுக்கிய பறங்கிக்காய் துண்டுகள் - ஒரு கப்
தேங்காய்த்துருவல் - கால் கப், சீரகம் - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் -1
மிளகாய்த்துாள் - ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, மஞ்சள் துாள் - தலா கால் தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாதியளவு தேங்காயை சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
பறங்கி துண்டுகளுடன் மஞ்சள் துாள், மிளகாய்த்துாள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
பின் அதனுடன் தேங்காய் விழுது, வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக மசிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, மிளகாய், மீதமுள்ள தேங்காய்த்துருவல் சேர்த்து தாளித்து, எரிசேரியுடன் கலந்து பரிமாறலாம்.