ஈவ்னிங் ஸ்நாக்ஸ்: ஸ்வீட்கார்ன் சீஸ் ரோல் ரெசிபி

தேவையான பொருட்கள்: ஸ்வீட்கார்ன் : 1 கப் (வேகவைத்தது), சீஸ்: 1/2 கப் (துருவியது), வெங்காயம்: 1, பச்சை மிளகாய் : 1, கொத்தமல்லி தழை: சிறிதளவு

மைதா மாவு: 2 கப், மிளகாய் துாள் அல்லது சில்லி பிளேக்ஸ் - அரை ஸ்பூன், மிளகுத்துாள் அரை ஸ்பூன், கரம் மசாலா 1/4 ஸ்பூன், உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.

ஸ்டப்பிங் தயார் செய்தல்: ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட்கார்ன், துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

பின் அதில் மசாலாப் பொருட்கள் (மிளகாய் துாள், மிளகுத்துாள், கரம் மசாலா, உப்பு) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

மைதா பேஸ்ட்: ஒரு சிறிய கிண்ணத்தில் மைதா மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மைதா மாவை பிசைந்து பின் சிறிய எலுமிச்சம்பழ அளவிற்கு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும்.ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய சப்பாத்தியாகத் தேய்த்துக் கொள்ளவும்.

அதன் நடுவில் தயாரித்து வைத்துள்ள சீஸ்-கார்ன் கலவையில் இருந்து 1-2 ஸ்பூன் வைக்கவும்.

சப்பாத்தியை இறுக்கமாக உருளை வடிவில் மடித்துக் கொள்ளவும். ஓரங்களில் மைதா பேஸ்டை தடவி நன்கு ஒட்டவும், இதனால் ஸ்டஃப்பிங் வெளியே வராது.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்துள்ள ரோல்களை மிதமான தீயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.

ஸ்வீட்கார்ன் சீஸ் ரோல் தயார். இதை தக்காளி சாஸ், அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.