இமயமலையில் அதிகரிக்கும் வெப்பநிலை... ஆய்வில் தகவல் !

இந்தியா, நேபாளம், சீனா உள்ளிட்ட நாடுகளில் இமயமலை தொடர் பரவியுள்ளது.

இமயமலையின் மத்தி, கிழக்கு பகுதிகளை விட மேற்கு பகுதி வெப்பநிலை உயர்ந்து வருவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

குளிர்காலத்தை விட, வசந்த காலத்தில் வெப்பநிலை அதிகமாகிறது.

பகலை விட, இரவு வெப்பநிலை அதிகம்.

கார்பன் உள்ளிட்ட வாயுக்கள் தொடர்ந்து அதிகரித்தால், 1900 உடன் ஒப்பிடுகையில் 2081 - 2100ல் குளிர்காலத்தில் மேற்கு இமயமலை 7.18 டிகிரி செல்சியஸ் உயரும்..

அதேவேளையில், மத்திய இமயமலை 6.71 டிகிரி, கிழக்கு இமயமலை 5.82 டிகிரி உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.