மனித எலும்புகள் நிறைந்த ரூப்குண்ட்... இமயமலையின் மர்ம ஏரி இது !

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைச் சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது 'ரூப்குண்ட்' (Roopkund) ஏரி.

1942ல் வனப்பகுதியின் காப்பாளர் ஹரி கிஷன் மத்வால் தற்செயலாக ஏரிக்குச் சென்றபோது, அங்கு நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கிடந்தது கண்டு அதிர்ந்தார்.

கார்பன் டேட்டிங் சோதனைகள், இவை ஏறக்குறைய 1,200 ஆண்டுகள் பழமையானவை என்பதைத் தெரிவித்தன.

எலும்புக் கூடுகள் மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், இறந்தவர்கள் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல.

இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள்; கிரேக்கத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். அனைவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தனித்தனியே இறந்தது தெரியவந்தது.

கத்தி அல்லது துப்பாக்கியால் ஏற்பட்ட காயங்கள் இல்லை. மாறாக மண்டை ஓடுகளில் விரிசல்கள் இருந்தன.

எனவே, அவர்கள் ஆலங்கட்டி மழையில் சிக்கியோ, ராட்சத பனிக்கட்டிகள் தாக்கியதாலோ, மண்டை பிளந்து உயிரிழந்திருக்க வேண்டும்.

இதில் ஆண்கள், பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். கடும் பனி, எலும்புக்கூடுகளைச் சிதையாமல் பாதுகாத்துள்ளன.

சில உடல்களில் தசைப்பகுதிகளும், தலைமுடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் 'நந்தாதேவி ராஜ் ஜாட்' என்ற புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்களாக இருக்கலாம்.

காலநிலை மாற்றத்தால் பனி உருகி, ஏரியின் அளவு சுருங்கி வருகிறது. சமூக விரோதிகள் எலும்புக்கூடுகளைத் திருடிச் செல்வதால், இந்த வரலாற்றுத் தளம் சிதையும் அபாயமுள்ளது.