மத்திய பட்ஜெட் 2026 : சுற்றுலா மற்றும் ரயில்வே துறை!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார் . அவர் தாக்கல் செய்த 9வது பட்ஜெட் ஆகும். அதில் சுற்றுலா, ரயில்வே துறைகளுக்கான அறிவிப்புகள் சில.
தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பதினைந்து இடங்களில் கலாசார மையங்கள் அமைக்கப்படும் .
தமிழகத்தின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் .
பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து பல்கலை நகரங்கள் அமைக்கப்படும்.
வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு 2 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீரிலும் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
நாடு முழுவதும் 7 நகரங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
சென்னை- பெங்களூரு, சென்னை - ஐ தராபாத், பெங்களூரு- ஐ தராபாத், புனே - ஐ தராபாத், மும்பை - புனே உள்ளிட்ட அதிவேக ரயில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.