ஹீரோவாகும் பிரபல நடன இயக்குனர்

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் நேரம், பிரமேம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கோல்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

அடுத்து நான் ஒரு தமிழ் படம் இயக்குகிறேன் என சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்திரன் கூறினார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார என்று அறிவித்தார்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் நடிகர் விஜய் சேதுபதி உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

தற்போது இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.