சீசன் ஸ்பெஷல்... மாம்பழ சர்பத்!
தேவையானப் பொருட்கள்: மாம்பழம் - தேவையானளவு, சர்க்கரை - 3 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், நன்னாரி சிரப் - 2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - தேவையானளவு.
முதலில் நல்ல இனிப்பு சுவையுடைய, பெரிய அளவிலான மாம்பழத்தின் தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய துண்டுகளை மிக்சியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, கூழாக அரைக்கவும்.
இதனுடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து, மீண்டும் லேசாக அரைக்கவும்.
இதற்கிடையே, ஒரு கண்ணாடி டம்ளரில் 2 டீஸ்பூன் நன்னாரி சிரப், ஐஸ் கட்டிகள் போட்டுக் கொள்ளவும்.
இதில், தயாரித்து வைத்த மாம்பழ கூழை ஊற்றி, ஸ்பூனால் நன்கு கிளற வேண்டும்.
அவ்வளவு தான், இப்போது சுவையான மாம்பழ சர்பத் ரெடி. விருப்பப்பட்டால், சியா விதைகளை இதில் சேர்க்கலாம்.