இன்று உலக ரோஸ் தினம்
உலகில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு தைரியம், நம்பிக்கை அளிக்கும் விதமாக செப்., 22ல் உலக ரோஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
புற்றுநோயாளிகளுக்கு ஒரு ரோஜாவை அன்பளிப்பாக வழங்குவதன் வாயிலாக, அவர்கள் ஆறுதல் பெறுவர்
இத்தினத்தில் அவர்களுக்கு 'ரோஸ்' வழங்கி மகிழ்விக்கலாம்.
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனடாவின் 12 வயது மெலின்டா ரோஸ், சில வாரங்களே வாழ்வார் என டாக்டர்கள் தெரிவித்த நிலையில் 6 மாதம் வாழ்ந்தார்.
இக்காலத்தில் அவர் மற்ற நோயாளிகள் உட்பட பலருக்கு கவிதை, கடிதம் எழுதி நம்பிக்கை ஏற்படுத்தினார்.
நோயாளிகளுக்கு சிறிது நேரம் ஒதுக்கி மகிழ்விக்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் தனியாக இல்லை என்பதை உணர்த்துவதோடு, அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் வழங்குவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.