இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்

தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி செப். 10ல் உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவன புள்ளி விவரப்படி, உலகம் முழுவதும் ஆண்டுக்கு 7.2 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஒருவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது என்றால், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இதை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரோ புரிந்துகொண்டு, அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, தற்கொலை என சிலர் சிந்திக்காமல் முடிவெடுக்கின்றனர்.

அதை சமாளித்து போராடி தான் வாழ்வில் முன்னேற வேண்டுமே தவிர எதிர்மறையாக சிந்திந்து தற்கொலை செய்வது கோழைத்தனமான செயல் என உணர வேண்டும்.

அடிக்கடி எரிச்சல், கோபம், அதீத அமைதி, வேலைத்திறன் குறைதல், படிப்பு, சமையலில் ஆர்வமின்மை, வேலையில் சோர்வு ஏற்படும் போது மன அழுத்தத்தில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

மன அழுத்தத்தில் இருப்பவர்களுடன் மனம் விட்டு பேசினாலே பாதி பாரம் குறைந்து விடும்.

தற்கொலை எண்ணம் இருந்தால் அவர்கள் மனதை மாற்றி கவுன்சிலிங் அளித்தால் அந்த எண்ணம், முயற்சியில் இருந்து விடுபட வைக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

'தற்கொலை பற்றிய கண்ணோட்டத்தை மாற்றுதல்' என்பது 2024 முதல் 2026 வரையிலான மையக்கருத்தாக உள்ளது.