இன்று பாரதியார் நினைவு தினம்

உண்மையை உயிராக போற்று. உண்மை பேசுபவர்கள் உயர்வாக மதிக்கப்படுவர்.

உழைத்து வாழ்வதில்தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.

துணிவு இருந்தால் துன்பம் அணுகாது. கல்வி, செல்வம், வீரம் என எல்லாம் துணிவால் பெறலாம்.

தர்மத்தின் பாதையில் நீ சென்றால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

பயம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. எனவே பயத்தை கைவிடு. தைரியமாக செயல்படு.

வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை இழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் வளர்ச்சி உண்டாகாது.

மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.

புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே. அதன் மூலம் கிடைத்த படிப்பினையை, ஒருபோதும் மறப்பது கூடாது.