மாதவிடாய் வலியை போக்கும் எள், பனைவெல்லம், கருஞ்சீரகம்!
இளம்பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை தற்போது அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தவறான வாழ்க்கை முறை, உணவில் அதிகமாக காரம், புளி, உப்பு, மசாலா போன்றவற்றை பயன்படுத்துவது.
பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமும், வளர்ச்சியும் தரக்கூடியது உளுந்து. மாதவிடாய் காலங்களில் உளுந்து சேர்த்த அரிசியை வேகவைத்து சாப்பிடுவது, எள் ஊற வைத்த நீரை குடிப்பதால், உதிரச்சிக்கல் நீங்கும்.
எள், பனைவெல்லம், கருஞ்சீரகம் மூன்றும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடிப்பது, மாதவிடாய் காலத்து வலி உட்பட பல பிரச்னைகள் நீங்க உதவுகிறது.
கசகசா, வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு இவற்றை சம அளவு சேர்த்து இடித்து, தேன், நெய் கலந்து சாப்பிட்டால் சரியான நேரத்தில் மாதவிடாய் வருவதுடன், வலியும் குறைகிறது.
நடைபயிற்சி மற்றும் தனுராசனம், பத்மகோணாசனம், உட்பட பல யோகாப்பயிற்சிகள் ஹார்மோன்களின் செயல்பாட்டை சீராக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. பெண்களின் அடிவயிற்றுப் பகுதியை பலப்படுத்த உதவுகிறது.
உரிய டாக்டகளிடம் கலந்தாலோசிப்பது மிகவும் அவசியமானது.