ஆரோக்கிய சத்துகள் நிறைந்த எள் !
உடல் எடை அதிகரிக்க உதவும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று எள் விதை. இதிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் மருத்துவ குணம் உடையது.
எள்ளில், 20 சதம் புரதம், 50 சதம் எண்ணெய், 16 சதம் மாவு பொருட்கள் உள்ளன. எள் விதை நீரிழிவை கட்டுக்குள் வைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குடல் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது. குடலில் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும்.
கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகம். வெள்ளை எள்ளில் இரும்பு சத்து அதிகம். இதுதவிர மெக்னீஷியம் சத்தும் உள்ளது.
அடிக்கடி இதை சாப்பிட, கொலஸ்ட்ரால், தைராய்டு மற்றும் மெனோபாஸ் பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
சுவாச மண்டலம் ஆரோக்கியமாகும். எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.
எள்ளிலுள்ள இரும்பு சத்து, ரத்த குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதயம் தொடர்பான நோய்களை தடுக்கவும் உதவுகிறது.
எள் விதையை வெல்ல பாகு, தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். வறுத்து பொடி செய்து, நெய் கலந்தும் சாப்பிடலாம்.