ஆரோக்கியத்தை காக்க எளிய சம்மர் டிப்ஸ்...

கோடை வெயில் வாட்டிவருவதால், வெளியே செல்லும்போது குடை, தொப்பி, காலணிகளை பயன்படுத்துவது நல்லது.

வீடுகளில், காலை, மாலை வேளைகளில் ஏ.சி.,யை தவிர்த்து, ஜன்னல், கதவுகளை திறந்து, காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறையும் வாய்ப்பு உள்ளதால், சீரான இடைவெளியில் நீராகாரங்கள் பருக வேண்டும்.

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் (250 மில்லி) வீதம், நாளொன்றுக்கு 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

வெயிலில் வெளியே சென்று விட்டு வந்த உடனேயே, பிரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீர், குளிர்பானங்களை பருகக் கூடாது. உடலின் வெப்பநிலை சமமான பின், பருகலாம்.

பழங்கள், பழச்சாறு, இளநீர், மோர், நுங்கு, நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்பூசணி உட்கொள்ள வேண்டும்.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்ற கடைகளில் மட்டுமே பழச்சாறு மற்றும் உணவுப்பொருட்களை வாங்கவேண்டும்.

பாட்டில் குடிநீர், பாக்கெட் உணவுப்பொருட்களின் லேபிளில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முழு முகவரியை சரிபார்த்து வாங்குவது அவசியம்.

பழங்களின் தோலில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது; எனவே அவற்றை நன்றாக கழுவிய பின் பயன்படுத்த வேண்டும்.

சுகாதாரமற்ற கடைகளில், ஈ மொய்க்கும் பண்டங்கள், பழங்கள், பழச்சாறுகளை வாங்கக்கூடாது.

செயற்கையாக அதிக சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை நிறமூட்டப்பட்ட பக்கோடா, பஜ்ஜி, சிக்கன் - 65 உள்ளிட்ட தின்பண்டங்களை உண்ணக்கூடாது.

செயற்கைாக கல் வைத்து பழக்கவைக்கப்பட்ட பழங்களை வாங்ககூடாது. இதனால், உடல் உபாதைகள் ஏற்படும்.