விவாகரத்துக்கு வழிவகுக்கும் தாம்பத்தியமில்லா திருமண வாழ்க்கை
திருமணமாகி சில மாதங்களில் விவாகரத்து என்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து கோரும் தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர்.
பெரும்பாலான தம்பதிகள் தங்களது அந்தரங்க வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாகவே விவாகரத்து வரை செல்கின்றனர்.
இந்தியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் அதிகம். தம்பதிகள் திருமணத்திற்குப் பின் நெருங்கிப் பழக சில மாதங்கள் தேவைப்படும்.
இந்த கால அவகாசம் பலருக்கும் கிடைப்பதில்லை. முதலிரவில் தன்னை குறைத்து மதிப்பிடாதவாறு, தனது பாலியல் ஆற்றலை நிரூபிக்கும் வகையில் ஆண்கள் பலர் உறவில் ஈடுபடுகின்றனர்.
உடலுறவு குறித்த அறிவியல் சார்ந்த அறிவு, அனுபவமின்மை காரணமாக பலர் தவறான நிலையில் உறவு கொள்வதால் துணைக்கு போதுமான இன்பம் கிடைப்பதில்லை.
இதனால் ஆண்களும் ஓரளவு பாதிக்கப்பட்டாலும், அவர்கள் ஏறக்குறைய உச்சநிலையை அடைந்துவிடுகின்றனர். எனவே பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இது கணவன்-மனைவிக்கு இடையே நாள்பட விரிசலை உண்டாக்கி திருமண முறிவை ஏற்படுத்துகிறது.
பாதிப்புடைய தம்பதிகள் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இந்தப் பிரச்னை முழுவதுமாக குணப்படுத்தக் கூடியதே என்கின்றனர் பாலியல் மருத்துவர்கள்.