கிராம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் அறிவோமா...

கிராம்பில் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், நயாசின், 'வைட்டமின் சி' போன்றவை உள்ளன.

ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 4 அல்லது 5 கிராம்புகளை போட்டு சில மணி நேரம் நன்கு ஊற வைத்தால் கிராம்பு தண்ணீர் தயார்.

இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது ஜீரணத்தை சீராக்கும்.

அஜீரணம் அல்லது வயிற்றுப் பொருமல் இருந்தால் உணவுக்குப் பின் குடிக்கலாம்.

இரவு தூங்கும் முன் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தும்.

மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கபத்தையும், பித்தத்தையும், கிராம்பு குறைப்பதோடு, ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது.

சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா தொல்லைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.

பசியின்மை, அதிக தாகம், வாந்தி இவற்றை கட்டுப்படுத்துகிறது.