மருதாணியின் மருத்துவப் பலன்கள் அறிவோமா...
மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை.
வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும்.
சருமப் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம். உடல் சூடு குறைய மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் தேய்க்கலாம்.
நகப்புண், நகச்சுத்திக்கு மருதாணி இலைகளை அரைத்து, அதன் மேல் கட்டினால், விரைவில் குணமாகும்.
காயம்பட்ட இடத்தில், 'இலை ஊறல் நீரை' விட்டு, ஒத்தடம் கொடுத்தால், கிருமித்தொற்று ஏற்படாது. விரைவில் குணமாகும்.
கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் நரம்பு வலி குறைய உதவுகிறது.
சேற்றுப் புண்கள் மற்றும் பித்த வெடிப்புகள் குணமாகும்.
மருதாணி இலை சேர்த்த எண்ணெய் நரையைத் தடுக்க உதவுகிறது.
மருதாணி இலையை நுகர்வதால் மன அழுத்தம் மற்றும் ஒற்றைத் தலைவலி சரியாகும்.
மருதாணி இலைச்சாறு, தண்ணீர், சர்க்கரையைக் கலந்து குடித்துவந்தால், விந்து எண்ணிக்கை பெருகும்.