மூக்கு ஒவ்வாமையை எவ்வாறு சரிசெய்வது?

தும்மல், மூக்கில் அரிப்பு, நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறி இருந்தால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

வயல்கள் மற்றும் சாலைகளில் இருந்து பறக்கும் துாசி இந்த ஒவ்வாமை பிரச்னையை மேலும் அதிகரிக்கும்.

ஒவ்வாமை நீண்ட நாட்கள் நீடித்தால் சைனஸ் அழற்சி, தலைவலி பிரச்னைகள் ஏற்படலாம்.

அதிக வெப்பம் காரணமாக மூக்கின் உள்பகுதி வறண்டு மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படுவதும் கோடை காலத்தில் காணப்படுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, தொண்டை எரிச்சல், வறட்டு இருமல் போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்சாதன அறைகளில் இருப்பவர்கள் இடையிடையே தண்ணீர் குடித்து உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும்.

பிரச்னை உள்ளவர்கள் வெயிலில் செல்லும்போது குடை அல்லது தொப்பி பயன்படுத்த வேண்டும்.

துாசி அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது.

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.