சிசேரியனுக்கு பிறகு முதுகு வலி ஏற்பட காரணம் என்ன?
சிசேரியனுக்கு முன்பு முதுகில் போடப்படும் ஊசியால் தான் முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்படுகிறது என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.
ஆனால், அது உண்மையல்ல. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் ஏதுமில்லை.
அனைத்து அறுவை சிகிச்சைக்கும், மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.
மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு அதிக ரத்தபோக்கு வெளியேறுகிறது. கால்சியம், இரும்பு சத்து குறைபாட்டை சமன்படுத்தாததால், வலி ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் வேலை செய்யும் பலர், பகலில் துாங்குவதால், சூரிய ஒளியிலிருந்து நேரடியாக உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் டி போதியளவில் கிடைப்பதில்லை.
கீரை, பால், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் வேலை செய்யும் பலர், சரியான கோணத்தில் நீண்ட நேரம் உட்காராத பட்சத்தில், முதுகு, தோள்பட்டையில் வலி ஏற்படலாம்.
இதை பிசியோதெரபி சிகிச்சையில் குணப்படுத்தலாம். ஆறு வாரம் முறையாக சிகிச்சை பெற்றால், மாற்றத்தை உணர முடியும்.