வானவில்லின் வடிவம் அறிவோமா?

வானவில் என்பது அரை வட்டம் இல்லை.

தரையில் இருந்து பார்ப்பதால் அப்படி தோன்றுகிறது. முழு வட்டமாக தான் இருக்கும்.

உயரமான மலைப்பகுதி, விமானத்தில் பயணிக்கும் போது பார்த்தால் இது தெரியும்.

மழைத் துளிகளின் உள்ளே சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்போது ஒளிச்சிதறல் ஏற்பட்டு வானவில் தோன்றுகிறது.

இதில், ஏழு நிறங்கள் இருக்கும். சில நேரங்களில் இதை விட குறைவாகவும் இருக்கலாம்.

வானவில் உருவாக மழை மட்டும் காரணமில்லை.

பனி மூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத துாசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகளும் முக்கியக் காரணம்.