குழந்தையின் தலையில் அடியா? செய்ய வேண்டியதும் கூடாததும்...
கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு குதுாகலம்தான். விளையாடும் போது, எங்காவது உயரத்தில் இருந்து தவறி விழ வாய்ப்புண்டு.
தலையில் பலமாக அடிபட்டால், சுயநினைவு இழத்தல், தலைவலி, வாந்தி ஏற்படும்.
மூளையை சுற்றியுள்ள இடங்களில் அழுத்தம் ஏற்பட்டு, மூளை எலும்பு பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அழுத்தி தேய்ப்பதால், ரத்தநாளங்கள் மேலும் சேதமடையலாம். சி.டி., ஸ்கேன் எடுத்தால், மூளை பாதிப்பை கண்டறிய முடியும்.
முன்மூளை பாதிக்கப்பட்டால் மூக்கு வழியாகவும், நடுமூளையெனில் காது வழியாகவும், பின் மூளை அடிபட்டால் வாய் வழியாகவும் ரத்தம் வரலாம்.
இச்சூழலில் காலம் தாழ்த்தாமல், உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
தலை, சவ்வு சார்ந்த பாதிப்புகளுக்கு, சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., மூலம், பாதிப்பின் தன்மையை அறிந்து சிகிச்சை அளிக்கப்படும்.
எனவே குழந்தைகள் தலையில் அடிபட்டால் அப்பகுதியை எதுவும் செய்யாமல், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.