குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறுதீனிகள்!

சிறுதீனிகளை வீட்டிலேயே தயாரித்து தருவது மிகவும் சிறந்தது. சட்டென செய்யக்கூடிய வகையில் சிறுதானிய அடைகள், உருண்டைகள், புட்டு, கொழுக்கட்டை செய்து தரலாம்.

வாரத்தில் ஓரிரு நாட்கள், எண்ணெயில் பொரித்த போண்டா, பஜ்ஜி, வடை, சுய் யம், கேசரி, பாயாசம் தரலாம்.

தினமும் ஒரு வேளை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, மாதுளை போன்ற பழங்களை சாப்பிடத் தரலாம்.

பேரீச்சம் பழம், பொட்டுக்கடலை, வேர்க் கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சையை கொடுக்கலாம் .

வெளி உணவை குழந்தைக்கு வாங்கித் தரும் போது, சுவையூட்டிகள் சேர்க்காத, புதிதாக சமைத்த உணவுகளை தரலாம்.

உதாரணமாக சுண்டல் வகைகள், பொரி கடலை, பட்டாணி, வேர்க்கடலை உருண்டைகள், எள் உருண்டை, அவல், போளி, மோதகம் போன்றவை.

வீட்டில் தயாரித்த உணவுகளை, வண்ணமயமான தட்டில் வைத்து, உணவின் பெயர், அவற்றில் உள்ள சத்துக்கள், உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை சொல்ல வேண்டும்.