காலையில் தவிர்க்க வேண்டிய உலர் பழங்கள் சில... !
காலையில் ஒருசில உலர் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அசவுகரியம், செரிமான பிரச்னைகளை ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றைப் பார்க்கலாம்...
பேரிச்சம்பழத்தில் சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் அதிகளவில் உட்கொள்ளும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது.
திராட்சையில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், வெறும் வயிற்றில் உட்கொண்டால் வயிற்று அசவுகரியம், வாயு அல்லது வீக்கம் ஏற்படலாம்.
அத்திப்பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதேவேளையில், அதிக நார்ச்சத்து காரணமாக வெறும் வயிற்றில் உட்கொள்வதால், செரிமான பிரச்னைகள், அசௌகரியத்தை ஏற்படக்கூடும்.
ஆப்ரிகாட்ஸ்களில் அதிக அளவு கரையாத நார்ச்சத்து உள்ளது. எனவே, காலையில் அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
வெறும் வயிற்றில் செர்ரி பழங்களை சாப்பிடும்போது, சில சமயங்களில் அமிலத்தன்மை காரணமாக ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சல் உண்டாக வாய்ப்புள்ளது.
கொடிமுந்திரியில் (ப்ரூன்ஸ்) அதிக நார்ச்சத்து காரணமாக இயற்கையான மலமிளக்கி தன்மைகள் உள்ளன. வெறும் வயிற்றில் உட்கொள்வதால் செரிமான பிரச்னைகள், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம்.
இந்த சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களை அளவாக சாப்பிடுவது சிறப்பானது. மற்ற உணவுகளுடனோ அல்லது இடையிலோ சாப்பிட்டால் செரிமான பிரச்னைகளை தவிர்க்கலாம்.
அதேவேளையில், காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர்ந்த பழங்களை உட்கொள்வது நன்மை அளிப்பதாகும்.