குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

பச்சை நிற வாழைப்பழங்களிலுள்ள ஸ்டார்ச், நார்ச்சத்து போல செயல்பட்டு ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.

சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளன. குடல் இயக்கத்தை சீராக்கவும், நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருக்க உதவும்.

புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர், குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. செரிமானத்தை மேம்படுத்தும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நட்ஸ்... பாதாம், வால்நட், முந்திரி ஆகியவை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தின் சிறந்த ஆதாரங்கள்; அவை கொழுப்பைக் குறைக்கின்றன.

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி ஆகியவை சுவையானவை மட்டுமல்ல; அவை வீக்கத்தை எதிர்த்துப் போராடும். ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்துள்ளன.

பசலைக் கீரை, காலே மற்றும் பிற பச்சை இலைக் கீரைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளன.

அரிசி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. காய்கறிகள், புரதங்களுடன் சேரும்போது சரிவிகித உணவு கிடைக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

போதியளவு தண்ணீர் குடிப்பது சிறந்த ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும். சரியான நீர்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்; நச்சுகளை வெளியேற்றும்.