மனதை மயக்கும் அழகிய ரோடு டிரிப்கள் சில !
மணாலி-லே நெடுஞ்சாலை... இமயமலையின் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகளின் வழியாக அமைதியான ஏரிகள், பனி மூடிய மலைகள், உயரமான பாதைகள் என சவாலானது இந்த சாகச பயணம்.
மும்பை - கோவா கடற்கரை சாலை... இந்தியாவின் மேற்கு கடற்கரையின் அழகை மும்பையிலிருந்து கோவா செல்லும் சாலைப் பயணத்தின் மூலம் அனுபவிக்கலாம்.
கோல்டன் ட்ரையாங்கிள் சர்க்யூட் (டில்லி - ஆக்ரா - ஜெய்ப்பூர்)... புதுடில்லியின் பரபரப்பான ரோடுகளை ஆராய்ந்து, ஆக்ராவிலுள்ள அழகிய தாஜ்மஹாலின் ரசித்து, ஜெய்பூரின் பாரம்பரிய அரண்மனைகளை ரசிக்கலாம்.
பெங்களூரு - கூர்க் - மூணார் டிரிப்... இயற்கை கொட்டிக் கிடக்கும் காபி தோட்டங்கள், அழகிய மலைவாசஸ்தலங்களின் அழகில் மெய்சிலிர்க்க வைக்கும்.
ராஜஸ்தான் பாரம்பரிய பாதை (ஜெய்ப்பூர் - ஜோத்பூர் - உதைபூர்)... கோட்டைகள் நிறைந்த ராஜஸ்தானின் அழகிய பாரம்பரியத்தை அதன் கம்பீரமான நகரங்கள் வழியாக சாலைப் பயணத்துடன் ரசிக்கலாம்.
சிக்கிம் - காங்டாக் - டார்ஜீலிங் டிரிப்... அருவிகள், அமைதியான மடங்கள், பனிசூழ்ந்த பரந்த இமயமலை என தனித்துவமான அழகிய அனுபவத்தை வழங்குகிறது இந்த சாலைப் பயணம்.
ஸ்பிட்டி பள்ளத்தாக்கு டிரிப்... ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் நீண்ட மற்றும் அழகிய நிலப்பரப்புகளின் வழியாக கரடுமுரடான சாகசத்தை, வளைந்து செல்லும் மலை சாலைகளின் வழியாக அனுபவிக்கலாம்.
கொங்கன் கடற்கரை சாலைப் பயணம் (மும்பை-கோவா-மங்களூர்)... கொங்கன் கடற்கரையில் சாலைப் பயணத்துடன் இந்தியாவின் மேற்குக் கடற்கரையின் இயற்கை அழகை ரசிக்கலாம்.