இந்தியா முழுவதும் மறக்க முடியாத ரயில் பயணங்களில் சில !
மும்பை - கோவாவுக்கு சஹ்யாதாரி பள்ளத்தாக்குகள், நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அரபிக்கடலின் அழகை ரசித்துக் கொண்டே மாண்டோவி எக்ஸ்பிரஸில் பயணிப்பது இந்தியாவின் மிக அழகிய ரயில் பயணமாகும்.
சிம்லாவை அடைய இமயமலை மலைகள் வழியாக, அழகிய பள்ளத்தாக்குகள், செங்குத்தான பாதைகள், பனிமூட்டமான புல்வெளிகள், 103 சுரங்கங்கள் என மூச்சடைக்க வைக்கிறது கல்கா சிம்லா பாரம்பரிய பொம்மை ரயில் பயணம்.
ஹூப்ளியில் இருந்து மட்கானுக்கு பயணிக்கும் போது, பிரம்மாண்டமான துத்சாகர் நீர்வீழ்ச்சியின் வழியே தண்ணீர் கொட்டும் அழகு ரசிப்பது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகும்.
மகாராஷ்டிராவின் மாத்தேரன் - நேரல் கணவாய்களுக்கு இடையே இயங்கும் குறுகிய ரயில் பயணம் இந்தியாவின் சிறந்த ரயில் பாதைகளில் ஒன்றாகும். இது கரடுமுரடான நிலப்பரப்புகளின் வழியாக செல்வது வெகுவாக ஈர்க்கிறது.
தமிழகத்தில் சென்னை - ராமேஸ்வரம் ரயிலில் மண்டபத்தை அடுத்து பாம்பன் பாலத்தில் அமைதியாக ஆர்பரிக்கும் கடலின் நடுவே பயணிப்பது வியப்பில் ஆழ்த்தும்.
1908ம் ஆண்டு முதல் இன்றும் நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையம் - ஊட்டிக்கு நீராவி என்ஜினில் இயங்குகிறது. அழகிய பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள், நீரோடைகள் என வழியெங்கும் இயற்கையை ரசிக்கலாம்.
டார்ஜீலிங் - ஹிமாலயன் ரயில்வே போக்குவரத்து 1881ல் துவங்கிய நிலையில், இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்படும் இந்த ரயில், கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீ., உயரத்தில் கம்பீரமாக பயணிக்கிறது.
காஷ்மீர் ரயில்வே ஜம்மு-உதம்பூர் வழித்தடத்தில் 20 சுரங்கங்கள், 158 பாலங்கள் உள்ளன. அழகிய ஷிவாலிக் மலைத்தொடர்களைச் சுற்றியுள்ள ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் அழகிய காட்சிகளில் மெய்சிலிர்க்கலாம்.