பித்த அதிகரிப்பதால் வரும் உள்ளங்கால் எரிச்சல் தீர்வுகள் சில!

உள்ளங்கை, கால்களில் எரிச்சல் ஏற்படுவது இன்றைக்கு பொதுவான விஷயமாக உள்ளது. இது போன்ற உணர்வு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

சர்க்கரை நோயாளிகள் தவிர, பித்த தோஷம் அதிகமாக உள்ளவர்களுக்கும், முதுகு வலி, முதுகுத் தண்டில் பிரச்னை இருப்பவர்களுக்கும் இது போன்ற உள்ளங்கை, கால்களில் எரிச்சல் ஏற்படுவதுண்டு.

எரிச்சலை போக்க நெல்லிக்காயை விழுதாக அரைத்து பாலில் கலந்து, உள்ளங்கை, காலில், இரவு படுக்க செல்வதற்கு முன், பற்று போடலாம்.

நெல்லிக்காயை விழுதாக அரைத்து பாலில் கலந்து, உள்ளங்கை, காலில், இரவு படுக்க செல்வதற்கு முன், பற்று போடலாம்.

ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னை இருந்தால் இதை தவிர்க்க வேண்டும்.

நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெய், பசு நெய்யில் கலந்தும் தடவலாம். உணவில் தினமும் நெல்லிக்காய் சேர்க்கலாம்.

இரவில் துாக்கப் பிரச்னை இருந்தால், பசு நெய் யிற்கு பதிலாக, எருமை நெய்யில் கலந்து தடவலாம்.

முல்தானி மட்டி, கற்றாழை, சந்தனம் இவற்றையும் பூசலாம்.

உணவில் புளி, தக்காளி, மிளகாய் போன்ற பித்தத்தை அதிகரிக்கும் பொருட்களை தவிர்த்து, கொத்தமல்லி தழை, தேங்காய் அதிகம் சேர்க்கலாம். இது பித்தத்தை குறைத்து, எரிச்சலை கட்டுப்படுத்தும்.