ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாரம்பரிய உணவுகள் சில

பனங்கிழங்கு... குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக் கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும்.

மாப்பிள்ளை சம்பா புட்டு... அடிக்கடி இந்த அரிசியை உணவில் சேர்க்க, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கக்கூடும். எனவே, குழந்தைகளுக்கு புட்டு செய்து தரலாம்.

குதிரைவாலி கொழுக்கட்டை... உடலில் எப்போதும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க, குதிரைவாலி அரிசியில் கொழுக்கட்டை, சூப் செய்து சாப்பிடலாம்.

பனையோலை கொழுக்கட்டை... பனை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்தும் மருத்துவ குணம் உடையது என்பதால் அவ்வப்போது இதை குழந்தைகளுக்கு தரலாம்.

வெந்தயக்களி... உடல் சூட்டை குறைக்க உதவும் பாட்டிகளின் பாரம்பரிய உணவு இது.

எள்ளு துவையல்... உடல் பலவீனமானவர்கள் உணவில் அடிக்கடி எள்ளை சேர்த்து வர ஆரோக்கியம் மேம்படும். மூட்டுத் தேய்மானம், எலும்பு தொடர்பான பிரச்னைகளுக்கு பலனளிக்கிறது.

நுங்கு ஜூஸ்... கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், உடலை நீரேற்றமாக வைக்க உதவும்.

கருப்பட்டி பணியாரம்... வெள்ளை சர்க்கரைக்கு மாற்றான கருப்பட்டி ரத்தச்சோகையை தவிர்க்கவும், உடலில் நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.

இலந்தை வடை... 90ஸ் கிட்ஸ்களின் பேவரீட் ஸ்நாக்ஸ் இது; ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக நிறைந்துள்ளன.

புளியங்கொட்டை... இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, செரிமானத்தை மேம்படுத்த உதவுவதால் வறுத்த புளியங்கொட்டையை சாப்பிடலாம்.