தினமும் ஒரு முட்டை ஏன் சாப்பிட வேண்டும்?

முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதன் வெள்ளைக்கருவில், 17 கலோரியும், மஞ்சள் கருவில், 59 கலோரியும் உள்ளது.

நாம் சமைக்கும் முட்டையை பொருத்து, கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும்.

முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கு தேவையான அயோடின் உள்ளது.

பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது.

காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது.

முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன், நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளிசர்டைஸின் அளவும், இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன.

இத்துடன் இதயத்துக்கு பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன.

தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்புக்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது.

வாரத்துக்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு, மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் வாயிலாக, குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

அமெரிக்காவின் 'நாசா 1969 ஜூலை 16ல் அனுப்பிய அப்பல்லோ-11' விண்கலம் நிலவுக்கு சென்றது.