கோடை கால தோல் நோய்களில் இருந்து குழந்தைகள் தப்பிக்க டிப்ஸ்...

கோடை கால தோல் நோய்களில் இருந்து தப்பிக்க குழந்தைகள், சிறுவர்கள் சுகாதாரம் அவசியமானது. வெயில் காலத்தில் சிரங்கு புண்களும் அதிகம் வரும்.

குழந்தைகளை தினமும் இருமுறையாவது ஈரத்துணியால் உடலை துடைப்பது, அவர்களை பருத்தி ஆடைகளை அணிய செய்யவும்.

ரோட்டு கடைகளில் சாப்பிடாமல் இருப்பது, தண்ணீரை காய்ச்சி குடிப்பது, செருப்பு போட்டு வெளியே செல்வது அவசியம்.

கை, கால்களை அடிக்கடி கழுவ அறிவுறுத்த வேண்டும். நகத்தை வெட்டி சுத்தமாக வைக்க வேண்டும்.

வெளியில் வெட்டி வைத்த பழங்களை வாங்க நேர்ந்தால் அந்த பொருள் ஈ, கொசு தாக்காமல் மூடி வைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க, நீர்ச்சத்து குறையாமல் இருக்க நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.