இனிப்பு வெள்ளரிக்காய் இட்லி ரெசிபி
தேவையானப் பொருட்கள்: வெள்ளரிக்காய் - 1, அரிசி - ஒரு கப் - வெல்லம் - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், உப்பு - கால் ஸ்பூன், நெய் - தட்டில் தடவ தேவையானளவு.
அரிசியை கழுவி, மூன்று மணி நேரம் ஊற விடவும்.
வெள்ளரிக்காயை தோல் நீக்கி, துருவி கொண்டு, அதன் சாற்றை பிழிந்து பாத்திரத்தில் தனியே வைக்கவும்.
ஊற வைத்த அரிசியை, பிழிந்து, மிக்சி ஜாரில் போட்டு, வெல்லம், தேங்காய் துருவல், தண்ணீருக்கு பதிலாக வெள்ளரிக்காய் சாறு சேர்த்து, இட்லி மாவு பதத்தில் அரைக்கவும்.
தண்ணீர் தேவைப்பட்டால், வெள்ளரிக்காய் சாற்றையே சேர்க்கவும். இந்த மாவில் துருவிய வெள்ளரிக்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இட்லி தட்டில் நெய் தடவி, அதில் மாவை ஊற்றி ஸ்டீமரில் 25 நிமிடம் வேக வைத்தால், இனிப்பு வெள்ளரிக்காய் இட்லி ரெடி.
இதனை நெய், தேங்காய் சட்னி அல்லது தேன் தொட்டு சாப்பிட சுவை அள்ளும். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
விருப்பப்பட்டால், மாவில் கொத்துமல்லியை பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.