மக்கள் விரும்பும் சுற்றுலா தலம்... முதலிடம் பிடித்த தாஜ்மஹால்
தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில், சுற்றுலா
பயணிகள் அதிகமாக வரும் இடமாக, தாஜ்மஹால் முதலிடத்தில் இருப்பதாக மத்திய
அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019 முதல் 2024 வரை தொடர்ந்து 6
ஆண்டுகளாக உ.பி.,யின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், அதிக சுற்றுலா பயணியர்
வருகையுடன், நுழைவு சீட்டு விற்பனையிலும் முதல் இடத்திலுள்ளது.
உலகின் டாப் ஐகானிக் லேண்ட்மார்க் இடங்களின் பட்டியலில் ஒன்றாகவும் தாஜ்மஹால் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ல் 2வது இடத்தை ஆக்ரா கோட்டையும், 3வது இடத்தை டில்லியிலுள்ள குதுப்மினாரும் பிடித்தன.
2021ல் தமிழகத்தின் மாமல்லபுரம் 2வது இடத்தையும், கோனார்க்கின் சூரியனார் கோவில் 3வது இடத்தையும் பிடித்தன.
டில்லி செங்கோட்டையும் அதிக மக்கள் விரும்பும் இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.