தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்... வேப்பம்பூ பச்சடி!

தமிழ் புத்தாண்டு தினத்தன்று இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.

அதில் வேப்பம் பூ பச்சடி முக்கியமான ஒன்றாகும். எனவே, பச்சடி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையானவை: காய்ந்த வேப்பம்பூ - ஒரு கைப்பிடி, பொடித்த வெல்லம் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று...

மாங்காய் - ஒரு துண்டு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - ஒரு சிட்டிகை. தாளிப்பதற்கு, எண்ணெய், கடுகு - ஒரு தேக்கரண்டி.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு, மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். பின், வேப்பம்பூவை சேர்த்து வறுத்து, புளியை கரைத்து ஊற்றவும்.

மாங்காயை தோல் சீவி நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மாங்காய் வெந்தவுடன், வெல்லத்தை போட்டு கொதிக்க வைத்து இறக்கினால், வேப்பம்பூ பச்சடி ரெடி.