டேஸ்டியான வாழைப்பூ கட்லெட் ரெடி

தேவையானப் பொருட்கள்: வாழைப்பூ - 1.5 கப், பெரிய வெங்காயம் - 1, பெருஞ்சீரக விதைகள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் - 0.5 டேபிள் ஸ்பூன்.

உருளைக்கிழங்கு - 2, சோள மாவு, கரம் மசாலா தூள் - 0.5 டீஸ்பூன், மைதா (அ) அரிசி மாவு - 2 டே.ஸ்பூன், கொத்தமல்லி இலை - சிறிதளவு, உப்பு ரொட்டித் தூள், எண்ணெய் - தேவையானளவு.

சுத்தம் செய்த வாழைப்பூவை வேக வைத்து, தண்ணீரை வடித்துவிட்டு, விழுதாக அரைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசிக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், நசுக்கிய பெருஞ்சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின், அரைத்த வாழைப்பூ விழுதைச் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

தொடர்ந்து, மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், உப்பு மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களுக்கு பின், மைதா மாவை சேர்க்கவும்.

பின், கொத்தமல்லி இலை தூவி ஆற விடவும். கட்லெட்டைத் தோய்த்துச் சாப்பிடுவதற்கு, சோள மாவைக் கொண்டு கெட்டியான விழுது தயாரிக்கவும்.

வட்டமாகவோ அல்லது இதய வடிவிலோ கட்லெட் தயாரித்து, சோள மாவு விழுதில் தோய்த்து, ரொட்டித் தூளில் புரட்டவும்.

பின், கடாயில் இருபுறமும் லேசாக வறுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெயை வடிய விட்டால் டேஸ்டியான வாழைப்பூ கட்லெட் ரெடி; தக்காளி கெட்ச் அப்புடன் பரிமாறலாம்.