இரண்டாவது பெற்றோர்: இன்று ஆசிரியர் தினம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
மாணவரின் வெற்றி, தோல்வியில், பெற்றோரை விட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உள்ளது.
மாணவர்களை, சிறந்த மனிதராக மாற்றுவது ஆசிரியர் தான்.
தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.
ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், அப்படியே மாணவரையும் தொற்றிக்கொள்ளும்.
ஆசிரியர் தங்களது, பொறுப்பை உணர்ந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
பொறுமை, அர்ப்பணிப்பு, புதிய தகவல்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும்.