பேஷன் உலகை கலக்கும் 'கிளிட்ஸ் அண்ட் கிளாம்' கலெக்ஷன்.
ராஸ் இண்டர்னேஷனல் குளோதிங் இங்க், இந்தியாவில் முன்னணி பேஷன் ஆடை தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று.
பேஷன் பிரியர்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் இந்நிறுவனம் தற்போது தனது புதிய ஆடை டிசைன்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஆடை கலெக்ஷனுக்கு 'கிளிட்ஸ் அண்ட் கிளாம்' கலெக்ஷன் என அந்நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.
தென்னிந்தியாவில் சிறந்த எம்பிராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த பாரம்பரிய உடைகள் இந்த பேஷன் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டன.
வண்ணமயமான கிளிட்ஸ் அண்ட் கிளாம் கலெக்ஷனை அணிந்துவந்து பெண் மாடல்கள் ரேம்ப் வாக் செய்தனர்.
இதற்கு பேஷன் உடை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏகோபித்த வரவேற்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பேஷன் உலகில் 'ஈக்கோ ஃபிரண்ட்லி' உடைகளைத் தயாரிக்கும் முறை பிரபலமாகி வருகிறது.