அறுசுவையில் மறைந்திருக்கும் குளிர்ச்சியும், சூடும்...!
அறுசுவைகளில், இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய மூன்றும், உடலுக்கு குளிர்ச்சி தரும்.
புளிப்பு, உப்பு, கார்ப்பு ஆகியவை, உடல் சூட்டை அதிகரிக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் ஒவ்வொரு விதமான சுவை உண்டு.
இனிப்பு சுவை நிறைந்த உணவு பொருள்கள்: அரிசி, கோதுமை, பார்லி, தானியங்கள், வெண்ணெய், நெய், வாழைப்பழம் ஆகியன
மேலும் மாம்பழம், கேரட், பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெல்லம், பதநீர், இளநீர் போன்றவை.
புளிப்பு: எலுமிச்சை, நாரத்தை, புளி, தயிர், ஆரஞ்சு, வினிகர், சோயா சாஸ்.
உப்பு: நட்ஸ், உப்பு, சில கடல் தாவரங்கள்.
கார்ப்பு: மிளகு, திப்பிலி, சுக்கு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகாய்.
கசப்பு: கீரைகள், டீ, காபி, பாகற்காய், கத்தரிக்காய், மஞ்சள், வெந்தயம், ஆலிவ்.
துவர்ப்பு: பீன்ஸ், பருப்பு வகை, மாதுளம்பிஞ்சு, புரோக்கோலி, காலிப்ளவர், டர்னிப்.