ஓணத்தின் அடி பொலி இனிப்பு அடை பிரதமன்! ரெசிபி இதோ...

ஓணம் விருந்தில் அடை பிரதமன் என்கிற அடை பாயசத்துக்கு தனி மரியாதை உண்டு.

ஓணன் பண்டிகையை முன்னிட்டு நம் வீடுகளில் இவற்றை செய்து அனைவரையும் அசத்தலாம். அதை செய்வதற்கான ரெசிபி இதோ…

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - 150 கிராம், தேங்காய் - ஒன்று, முந்திரி, திராட்சை தலா 10, ஏலப்பொடி - அரை தேக்கரண்டி, நெய்- தேவையான அளவு.

செய்முறை: தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். பச்சரிசியை ஊற வைத்து மையாக அரைக்கவும்.

பச்சரிசி மாவை பிசைந்து, வாழை இலையில் மெலிதாக தேய்த்து, நீராவியில் வேகவைத்து எடுக்க வேண்டும்.

பின் அவற்றை, சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்ட வேண்டும்.

வெண்கல உருளியில் வெல்லப்பாகு காய்ச்சி, அடையை சேர்த்து கொதிக்க விடும்போது மொத்த ஏரியாவும் வாசனையில் தூக்கும்.

தங்க நிறத்தில் மாறும் வரை கொதிக்கும் பாயசத்தில், தேங்காய் பாலும் ஏலக்காய் தூளும் சேர்க்க வேண்டும்.

இறுதியில், நெய்யில் வறுத்த முந்திரி, சிறு சிறு தேங்காய் துண்டுகளை சேர்த்தால் அடை பிரதமன் ரெடி.