அன்பு தரும் கதகதப்பே.. அல்சைமர் நோய்க்கு தீர்வு!
நமது மூளையின் செல்கள் சுருங்க ஆரம்பித்து, அப்நார்மல் புரோட்டீன்கள் படிவதால், செல்களுக்கு இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்படும். பின் மூளையின் செயல்பாடுகள், மெல்ல மெல்ல முடங்கும்.
சாதாரண மறதியின் போது, உண்மையிலே மறந்த உணர்வு இருக்கும். ஆனால் அல்சைமர் நோயாளிகளுக்குத் தனக்கு மறதி நோய் இருப்பதே தெரியாது.
இதை முழுமையாக குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால், பாதிப்பின் வேகத்தைக் குறைக்க முடியும்.
குறிப்பாக, பழைய நினைவுகளை புதுப்பித்தல், பழைய புகைப்படங்கள், பழைய சம்பவங்களை பேசுவதால், நினைவுப்படுத்த முடியும்.
நடைபயிற்சி, காய்கறி நறுக்குதல், பூ கட்டுதல், புதிர்கள் விடுவித்தல், பல்லாங்குழி ஆடுதல், கோயில் ஆன்மிக நிகழ்வுகள் போன்றவற்றில் ஈடுபடுத்துவது, மூளைச் செல்களைத் தூண்டும்.
இவர்களுக்கு மறதி இருப்பதால், வீட்டின் அறைகள், கழிப்பறை கதவுகள், கிச்சன் ஆகியவை முன் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கலாம். மருந்துகளை அவர்களாகவே உட்கொள்ள அனுமதிக்க கூடாது.
அல்சைமர் பாதிக்கப்பட்டவர்களிடம் ஏன், எதற்கு, எப்படி? எனக் கேள்வி கேட்டு, அவர்களைக் குழப்பக் கூடாது. அவர்களிடம் விவாதிக்காமல் அன்பாகப் பேசுவது அவசியம்.
பழைய நிகழ்வுகளை மறந்தாலும், தங்களை அன்பாகப் பார்த்துக்கொள்கிறார்கள் என்ற உணர்வை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
நோயாளிகளைப் பராமரிப்பவர்கள் சகிப்புத்தன்மையோடு இந்நோய் பற்றிய புரிதலுடன் அவர்களை கையாள வேண்டும். அன்பும், அரவணைப்புமே அவர்களுக்கு சிறந்த மருந்து.