உலகின் பெரிய சூரிய கடிகாரம்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 'ஜந்தர் மந்தர்' எனும் திறந்தவெளி வானியல் கோளரங்கம் உள்ளது.
பரப்பளவு 4.6 ஏக்கர். 19 வானியல் கருவிகள் உள்ளன. வானியல் நிலைகளை நேரடியாக பார்க்கலாம்.
இங்கு உலகின் பெரிய சூரிய கடிகாரமும் உள்ளது. உயரம் 90 அடி.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன், நேரத்தை அறியும் விதமாக அமைக்கப்பட்டது.
இது, 1734ல் ராஜ்புத் மன்னர் சவாய் ஜெய் சிங் ஆட்சியில் கட்டப்பட்டது.
இது யுனெஸ்கோவின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
டில்லி, மதுரா, உஜ்ஜயினி, வாரணாசியிலும் 'ஜந்தர் மந்தர்'களை மன்னர் அமைத்தது குறிப்பிடத்தக்கது.