டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்றே இல்லை... சைபர் மோசடியில் ஏமாற வேண்டாமென போலீசார் எச்சரிக்கை!

சமீபகாலமாக ஆங்காங்கே 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் பெயரில் நடந்த மோசடியில் சிக்கி, பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர்.

'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற ஒன்று, நம் சட்டத்தில் இல்லை, இதை மக்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.

போலீஸ் அல்லது மத்திய அமைப்புகள் எவரையும் தொலைபேசி வாயிலாக கைது செய்வதும், பணம் கேட்டு வழக்கை முடிக்கும் நடைமுறையும் இல்லை.

இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் சிக்காமல், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும்.

வங்கி, ஆதார், ஏ.டி.எம்., போன்ற விபரங்கள், ஓ.டி.பி., போன்றவற்றை யாரிடமும் பகிரக்கூடாது.

அவரவர் வீடுகளில் உள்ளவர்களுக்கு, இளைஞர்கள் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.