உலக சுற்றுலா தினம்...

பொருளாதார துறையில் ஒன்றாக சுற்றுலா உள்ளது.

உலகில் 10ல் ஒருவருக்கு இத்துறை வேலை அளிக்கிறது.

லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.

சுற்றுலா செல்வது என்றாலே குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானது.

இது உலகின் பல்வேறு முக்கியமான இடங்களை, கலாசார பெருமைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது.

இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் செப். 27ல் உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

'சுற்றுலா, பசுமை முதலீடு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.