லட்சியத்தை நோக்கி முயற்சிகள் இருக்கணும்... ரவீந்திரநாத் தாகூரின் தன்னம்பிக்கை வரிகள் !

தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.

எப்போது பிரச்னை என்று ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உணர்ந்தால் தேவையற்ற மனவருத்தம் உண்டாவதில்லை.

லட்சியம் நிறைவேற வேண்டுமே என்ற கவலை இருந்தால் தான் மனத்தெளிவு உண்டாகும். அந்த லட்சியத்தை நோக்கி நம் முயற்சிகள் இருக்கும்; ஆற்றல்கள் வெளிப்படத் துவங்கும்.

உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும்

எப்போதும் மனதை எளிமையாகவும், தூய்மையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க விரும்புங்கள்.

தன்னிடம் உள்ள பழுத்த பழங்களை மரம் பிறருக்காக தருவதைப் போல, ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.

வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.

மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம்.

என்னால் ஒரு கதவு வழியாகச் செல்ல முடியாவிட்டால், நான் வேறொரு கதவு வழியாகச் செல்வேன், அல்லது நான் ஒரு கதவை உருவாக்குவேன்.

உங்கள் வாழ்க்கையில் சூரியன் மறைந்துவிட்டது என்று நீங்கள் அழுதால், உங்கள் கண்ணீர் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைத் தடுத்துவிடும்.

விடியற்காலை இன்னும் இருட்டாக இருக்கும்போதும் ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை.